TNPSC Thervupettagam

இந்தியாவில் தகவல் ஆணையங்களின் செயல்திறன்

October 16 , 2023 279 days 237 0
  • இந்தியாவில் தகவல் ஆணையங்களின் செயல்திறன் குறித்த அறிக்கை, 2022-23 ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • நாடு முழுவதும் உள்ள 27 மாநிலத் தகவல் ஆணையங்களில் மொத்தம் 3,21,537 மேல் முறையீடுகள் மற்றும் புகார்கள் நிலுவையில் உள்ளன.
  • அதிகபட்சமாக மகாராஷ்டிராவிலும் (1,15,524), அதைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் (41,047) மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.
  • தமிழ்நாடு அரசு இது குறித்தத் தகவல்களை அளிக்க மறுத்து விட்டது.
  • ஜார்க்கண்ட், தெலுங்கானா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களின் தகவல் ஆணையங்களில் நடப்பு அதிகாரிகள் பதவி விலகிய பின் புதிய தகவல் ஆணையர்கள் நியமிக்கப் படாததால் அவை செயல்படாமல் உள்ளன.
  • ஆறு மாநிலத் தகவல் ஆணையங்கள் தற்போது தலைமையின்றி செயல்படுகின்றன.
  • மேற்கு வங்காள மாநிலத் தகவல் ஆணையம் (SIC) ஆனது ஒரு விவகாரத்தினைத் தீர்ப்பதற்கு 24 ஆண்டுகள் மற்றும் ஒரு மாத அளவிலான அவகாசத்தினை எடுத்துக் கொள்கின்றது.
  • சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், மேல்முறையீடு அல்லது புகாரைத் தீர்ப்பதற்கு மாநில தகவல் ஆணையங்கள் எடுத்துக் கொள்வதாக மதிப்பிடப்பட்ட நேரம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகும்.
  • ஒடிசா மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களின் தகவல் ஆணையங்கள் இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்கின்றன.
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியானது இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்