TNPSC Thervupettagam

இந்தியாவில் தட்டம்மை தடுப்பூசி வழங்கீட்டில் உள்ள இடைவெளிகள்

November 22 , 2023 242 days 144 0
  • 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் தட்டம்மை தடுப்பூசியின் முதல் தவணையினை 11 லட்சம் குழந்தைகள் தவறவிட்டுள்ளனர்.
  • தட்டம்மை தடுப்பூசி வழங்கீட்டில் அதிக இடைவெளி உள்ள பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் இந்த அறிக்கையானது, 2022 ஆம் ஆண்டில் 40,967 பாதிப்புகள் பதிவானதை அடுத்து, தட்டமை தொற்றுகளை எதிர்கொண்ட 37 நாடுகளில் ஒன்றாக இந்தியாவினையும் குறிப்பிடுகிறது.
  • தட்டம்மை என்பது பொதுவாக குழந்தைகளைப் பாதிக்கின்ற அதிகளவில் தொற்றக் கூடிய வைரஸ் தொற்று ஆகும்.
  • இந்த நோய்த்தொற்று ஆனது, பொதுவாக அதிக காய்ச்சல், இருமல், சளி மற்றும் உடல் முழுவதும் செந்நிற தடிப்புகளை ஏற்படுத்துகிற நிலையில் இந்தத் தீவிரமான உடல் உபாதைகள் ஆனது மரணத்திற்கு இட்டுச் செல்லும் அளவிற்கு இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்