சிர்மா SGS டெக்னாலஜி நிறுவனத்தின் ஒரு அதிநவீன மடிக்கணினி ஒருங்குசேர்ப்பு மையமானது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது தகவல் தொழில்நுட்ப வன்பொருளுக்கான PLI 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தமிழ்நாட்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) பல்வேறு திட்டங்களின் கீழ் 47க்கும் மேற்பட்ட உற்பத்தி அலகுகளுக்கு ஆதரவளிக்கப் படுகின்றன.
PLI 2.0 என்ற திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 27 அலகுகளில் ஏழு அலகுகள் தமிழக மாநிலத்தில் அமைந்துள்ளன.
தமிழ்நாடு இன்றுவரையில் 1.3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான மதிப்பிலான மொத்த உற்பத்தி இலக்கினை அடைந்துள்ளதோடு மேலும் இந்தியாவின் ஏற்றுமதியில் 30% பங்கினைக் கொண்டுள்ளது.