உலக வறுமைக் கடிகாரம் என்ற கணக்கெடுப்பின் படி, இந்தியா தனது மக்கள் தொகையில் தீவிர வறுமையில் உள்ள மக்களின் எண்ணிக்கையினை சுமார் 3 சதவீதத்திற்கும் கீழாக குறைத்துள்ளது.
உலக வறுமைக் கடிகாரம் கணக்கெடுப்பு ஆனது, 2030 ஆம் ஆண்டு வரையில் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் நிகழ் நேர வறுமை குறித்த மதிப்பீடுகளை வழங்குகிறது.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது, ஒரு நாளுக்கு 2.15 டாலர் வருமானத்தினை ஈட்டும் பிரிவினரைக் கண்டறிந்து இந்தத் தகவல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டில் சுமார் 4.69 கோடி தீவிர வறுமையில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் சுமார் 3.44 கோடி ஆக குறைந்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மொத்த மக்கள்தொகையில், 2022 ஆம் ஆண்டில் சுமார் 3.3 சதவீதமாக இருந்த தீவிர வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையானது 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.