பிஜாலராவன் போலார் என்பது உலகம் முழுவதுமிருந்து சாகசப் பிரயாணிகளின் துருவப் பயணமாகும்.
இது 1997ல் இருந்து ஸ்வீடன் நிறுவனமான பிஜாலரவென் என்ற நிறுவனத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பயணமாகும்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலிருந்து 26 வயது நிரம்பிய நியோக் எனும் சாகசப் பிரயாணி இந்த பிஜாலரவென் துருவப் பயணத்தில் பங்கு பெறும் முதல் இந்தியர் ஆவார்.
ஏப்ரல் 2018ல் நடைபெற உள்ள இந்தப் பயணத்தில் பங்கு பெறும் பிரயாணிகள் நார்வே மற்றும் ஸ்வீடனில் காணப்படும் ஆர்க்டிக் வனாந்தரத்தில் மைனஸ் 30O செல்சியஸ் தட்ப வெப்ப நிலையில் 300 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்ய வேண்டியிருக்கும்.