இந்தியாவில் தேன்வளைக்கரடி
October 9 , 2024
45 days
65
- உத்தரகாண்ட் மாநிலத்தின் தெராய் கிழக்கு வனப் பிரிவில் (TEFD) முதல் முறையாக ராடெல் எனப்படும் தேன்வளைக்கரடி ஒளிப்படக் கருவியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
- தேன்வளைக்கரடிகள் வீசல் (மர நாய்) குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துண்ணி வகை பாலூட்டிகள் ஆகும்.
- சிறிய விலங்குகள், பழங்கள் மற்றும் தேன் ஆகியவற்றை உண்ணும் இந்த இரவு வாழ் உயிரினங்களின் உணவு முறை வேறுபட்டதாகும்.
- IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் இந்த இனமானது "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" என்று பட்டியலிட்டுள்ளது.
Post Views:
65