இந்திய நகரங்களில் வசிப்பவர்கள் மத்தியிலான முஸ்லீம் மற்றும் பட்டியலிடப்பட்டச் சாதியினர் இடையிலான பிரிவினையின் நிலைமையானது, கறுப்பு மற்றும் வெள்ளை அமெரிக்கர்களுக்கு இடையே உள்ள பிரிவினையின் தற்போதைய நிலையினை ஒத்து உள்ளது.
சர்வதேசக் கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களின் குழு, ‘குடியிருப்புப் பிரிப்பு மற்றும் இந்தியாவில் உள்ள உள்ளூர் பொதுச் சேவைகளுக்கான ஒரு சமமற்ற அணுகல்: 1.5 மீ சுற்றுப்புறங்களில் இருந்து பெறப்பட்ட சான்றுகள்’ என்ற தலைப்பிலான ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது.
இது 2012 ஆம் ஆண்டு சமூகப் பொருளாதார மற்றும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளைப் பயன்படுத்தியது.
முஸ்லீம் மக்கள்தொகையில் 26% பேர் 80%க்கும் அதிகமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர்.
17% பட்டியலிடப்பட்டச் சாதியினர், 80% பட்டியலிடப்பட்ட சாதியினர் மக்கள்தொகைக்கு மேல் உள்ள சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர்.