இந்தியப் பிரதமர் வணிக ரீதியிலான சுரங்கத்திற்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களின் ஏலத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
உலகின் நான்காவது மிகப்பெரிய நிலக்கரி இருப்பு உள்ள நாடாகவும் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளர் நாடாகவும் இந்தியா இருக்கும் போதிலும், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில்லை.
ஆனால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளர் நாடு இந்தியாவாகும்.
மத்திய அரசானது 2030 ஆம் ஆண்டு வாக்கில் 100 மில்லியன் டன்கள் அளவிற்கு நிலக்கரியின் வளிமயமாக்குதலை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது.