இந்தியாவில் நிலவளம் குன்றல் பற்றிய UNCCD அமைப்பின் அறிக்கை
October 31 , 2023 395 days 267 0
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 30.51 மில்லியன் ஹெக்டேர் நிலத்தின் வளம் குன்றியுள்ளது.
அதாவது 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் நிலப்பரப்பில் சுமார் 9.45 சதவீதம் தரமிழந்துள்ளது.
இது 2015 ஆம் ஆண்டில் 4.42 சதவீதமாக இருந்தது.
இந்தியாவின் மொத்த வளம் குன்றிய நிலமானது சுமார் 43 மில்லியன் கால்பந்து மைதானங்களின் அளவிற்குச் சமம் ஆகும்.
2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை நாட்டின் 854.4 மில்லியன் மக்கள் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை, உலக நாடுகள் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 100 மில்லியன் ஹெக்டேர் அளவிலான வளமான மற்றும் உற்பத்தித் திறன் மிக்க நிலத்தை இழந்துள்ளது.