இந்தியாவில் நிலவும் உள்நாட்டு புலம்பெயர்வின் விளைவுகள்
March 30 , 2025 3 days 42 0
குறைவான வருமானம் கொண்ட மாநிலங்களிலிருந்து அதிக வருமானம் கொண்ட மாநிலங்களுக்கு உழைப்பாளர்கள் புலம்பெயர்வதன் விளைவாக நாட்டின் தெற்கு மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற அதிக வருமானம் கொண்ட மாநிலங்களில் அதிகப் பணவீக்கம் ஏற்படுகிறது.
சில்லறை விற்பனை விலைகளின் பிராந்திய வாரியான பகுப்பாய்வு ஆனது, தென் மாநிலங்கள் காய்கறிகள், சிறு தானியங்கள் மற்றும் பெரும்பாலான பருப்பு வகைகள் போன்ற பொருட்களுக்கான விலையில் அதிக உயர்வுப் போக்கைக் காட்டுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறது.
தெற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் அதிகப் பணவீக்கப் போக்குகள் உள்ள நிலையில் வடகிழக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்கள் குறைவான பணவீக்கத்தைக் கொண்டுள்ளன.
பெருந்தொற்றுக்குப் பிந்தையக் காலத்தில் (2021 முதல் 2025 ஆம் நிதியாண்டு வரை), வடகிழக்குப் பகுதிகளில் பணவீக்கம் 3.4% குறைந்துள்ளது, அதே நேரத்தில் தெற்குப் பிராந்தியத்தில் இது 2.6% மட்டுமே குறைந்தது.
2021 மற்றும் 2025 ஆம் நிதியாண்டு வரையிலான காலக் கட்டத்தில் 35 மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களில், தமிழ்நாட்டின் பணவீக்கம் ஆனது கடந்த 13 ஆண்டுகளுள் 9 ஆண்டுகளில் அகில இந்தியப் பணவீக்க அளவினை விட அதிகமாக இருந்தது.
குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் கடந்த 13 ஆண்டுகளுள் 9 ஆண்டுகளில் அகில இந்தியப் பணவீக்க அளவினை விட குறைந்தப் பணவீக்கத்தைக் கொண்டிருந்தன.
இந்திய மாநிலங்களின் விற்பனை வரி வசூலில் தென் மாநிலங்கள் 30% என்ற அதிக பட்ச பங்கைக் கொண்டுள்ளன, அதைத் தொடர்ந்து வடக்குப் பகுதியானது அதிகப் பங்கினை கொண்டுள்ளது.
மாநிலங்களில், பிப்ரவரி மாதத்தில் கேரளா 7.3% என்ற மிக அதிக நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்க விகிதத்தினையும், அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் 4.9% என்ற விகிதத்தினையும் கொண்டுள்ளது.