இந்தியாவின் நிலத் தரமிழப்பு நடுநிலையாக்கல் திட்டத்தின் முன்னேற்றத்திற்கு நீர்ப் பள்ளத்தாக்கு அரிப்பு ஆனது ஒரு கடுமையான தடையாக உள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் ஐக்கிய நாடுகள் சபையின் நிலத் தரமிழப்புச் செயல்பாட்டு நிரலைப் பூர்த்தி செய்வதற்கு 77 மாவட்டங்களில் நிலவும் நீர்ப் பள்ள அரிப்பினைத் தடுப்பதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
70 சதவீத அரிப்பானது, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பதிவாகியுள்ளது.
UNCCD கூற்றுப் படி, உலகின் மொத்தப் பரப்பளவில் சுமார் 20 முதல் 40 சதவீதம் ஆனது நிலத் தரமிழப்பினால் பாதிக்கப்படுகிறது.