இந்தியாவில் பயன்படுத்தப்படாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கான வீதவரி நிதிகள்
January 29 , 2025 3 days 26 0
பல்வேறு மாநிலங்களின் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நல வாரியங்கள் ஆனது இன்னும் 70,744.16 கோடி ரூபாய் மதிப்புள்ள வீத வரியைப் பயன்படுத்தவில்லை.
தொழிலாளர்களின் நலனுக்காக கட்டுமான நிறுவன முதலாளிகளிடமிருந்து வீதவரி வசூலிக்கப்படுகிறது.
2005 ஆம் ஆண்டில் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம் அமல்படுத்தப் பட்டதிலிருந்து, நல வாரியங்கள் 1,17,507.22 கோடி ரூபாயை வசூலித்துள்ளன.
1996 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்த ஒரு சட்டம் ஆனது, மாநில அரசுகளால் அமைக்கப் பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் ஆனது, ஒரு முதலாளி மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமானச் செலவில் "சுமார் 2 சதவீதத்திற்கு மிகாமலும் அல்லது 1 சதவீதத்திற்குக் குறையாமலும்" முதலாளிகளிடமிருந்து வீத வரி வசூலிக்க அதிகாரம் அளிக்கிறது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 36 மாநில நல வாரியங்களில் சுமார் 5,73,48,723 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலமானது, கடந்த 19 ஆண்டுகளில் வசூலித்த வீத வரியில் இருந்து 13,683.18 ரூபாயினைச் செலவிட்டது.
அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை முறையே 7,921.42 கோடி ரூபாய் மற்றும் 7,826.66 கோடி ரூபாயை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தின் வீத வரிக் கணக்குகளில் 9,731.83 கோடி ரூபாய் இருப்பு உள்ளது.
கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 7,547.23 ரூபாய் மற்றும் 6,506.04 ரூபாய் இருப்பு வைத்துள்ளன.