இந்தியாவில் உயர்கல்வி பயில, வெளிநாட்டு மாணவர்களை கவர்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது (Ministry of Human Resources Development) “இந்தியாவில் பயில்” (Study in India) என்ற திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் பயில் திட்டத்தின் முதன்மை நோக்கங்களாவன,
கவர்ச்சிகரமான கல்வி இலக்காக (attractive education destination) இந்தியாவை அடையாளம் காட்டுவதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களை இலக்கிடல்.
கல்வி கற்பதற்காக இந்தியாவிற்கு வருகின்ற சர்வதேச மாணவர்களுக்கும் இந்தியாவிலிருந்து செல்கின்ற மாணவர்களுக்கும் எண்ணிக்கையில் உள்ள சமநிலையின்மையை குறைத்தல் .
2018 ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையில் (Times Higher Education Ranking) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் உள்ள 38 சதவீதத்தினர் இந்திய மாணவர்களாவர்.
இதன் நேர்மாறாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (Indian Institute of Science - IISc) வெறும் ஒரு சதவீதம் மட்டும் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர்.
2016-17 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி மீதான அனைத்திந்திய கணக்கெடுப்பு (All India Survey on Higher Education) அண்மையில் வெளியிடப்பட்டது. இது இந்தியப் பல்கலைக்கழகங்களில் வெறும் 47,575 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே பயில்வதாக தெரிவித்துள்ளது.