இந்தியாவில் உயர்கல்வி பயில்வதற்கு வெளிநாட்டு மாணவர்களை கவர்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமானது (Ministry of Human Resources Development -HRD) மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்துடன் (Ministry of External Affairs) கூட்டிணைந்து“ இந்தியாவில் பயில்வோம்” (Study in India) திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டமானது, மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களை ஒத்ததாகும்.
இந்த திட்டமானது இந்தியாவில் உயர்கல்வி பயிலும் தகுதி வாய்ந்த மெச்சத்தகு (meritorious) வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி கட்டணத் தள்ளுபடியும் (fee waiver), கல்வி ஊக்கத் தொகையையும் வழங்கும்.
ருவாண்டா, பூடான், வங்கதேசம், இலங்கை, குவைத், ஈரான், தாய்லாந்து, எகிப்து, மலேசியா, நைஜீரியா, கஜகஸ்தான், சவூதி அரேபியா, வியட்நாம், நேபாளம் உட்பட 30 நாடுகளிலிருந்து, முதன்மையாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவில் உயர்கல்வி பயில கவருவதற்கு இத்திட்டம் இலக்கினை நிர்ணயித்துள்ளது,
இந்தியாவில் பயில்வோம் திட்டத்தின் தொடக்கத்தின் மூலம் 2022-ல்5 லட்சம் முதல் 2 லட்சம் வரை சர்வதேச மாணவர்களை இந்தியாவில் உயர்கல்வி பயில கவருவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்சமயம் நடப்பில், இந்திய அரசானது இந்தியாவில் உயர்கல்வியில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலான இடங்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்குகின்றது,
இருப்பினும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த ஒதுக்கீட்டுகூறு பெரிதும் பயன்படுத்தப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது.
நடப்பில் இந்தியாவில் 45000 சர்வதேச மாணவர்கள் பயில்கின்றனர். இது உலகளாவிய கல்விக்கான மாணவர்களின் நாடுகடந்த இடப்பெயர்வில் வெறும் 1 சதவீதமே ஆகும்,
இந்தியக் கல்வி நிறுவனங்கள் மிகக்குறைந்த சர்வதேச தரவரிசையைக் கொண்டிருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.