அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமானது (CSIR - Council of Scientific and Industrial Research) பாவிபிரவிர் மற்றும் பைட்டோ பார்மாசூட்டிக்கல் போன்ற மருந்துகள் மீதான தனது மருத்துவச் சோதனையைத் தொடங்கியுள்ளது.
பாவிபிரவிர் என்பது இன்புளூயன்சாவிற்குச் சிகிச்சையளிப்பதற்காக சீனா, ஜப்பான் மற்றும் இதர நாடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும்.
CSIR ஆனது உள்ளூர் மூலிகைகளை உயிரியல் மருந்தாகப் பயன்படுத்தவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஆணையம் இந்தச் சோதனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.