இந்தியாவில் பிரிவினை சார்ந்த பயங்கரங்கள் நினைவு தினம் - ஆகஸ்ட் 14
August 17 , 2024 99 days 170 0
1947 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த பிரிவினையின் போது தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்கும் இடம் பெயர்ந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு ஜூன் 03 ஆம் தேதியன்று செய்தியாளர் கூட்டத்தில், மௌண்ட் பேட்டன் பிரபு சுதந்திரத்திற்கான தேதியை - 14 ஆகஸ்ட் 1947 ஆக அறிவித்தார்.
1947 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று, பிரித்தானியப் பாராளுமன்றம் ஆனது பிரிவினைக்கான ஏற்பாடுகளை இறுதி செய்து, சுதேச அரசுகளின் மீதான பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை கைவிடுவதற்கான விதிமுறைகளைக் கொண்ட இந்திய சுதந்திரச் சட்டத்தை நிறைவேற்றியது.
குடியேற்றத்தின் போது சீக்கியர்கள் - முஸ்லிம்கள் - இந்துக்கள் இடையே கலவரம் வெடித்தது.
பிரிவினையின் போது பஞ்சாப் முழுவதும் 12 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்ததாக மதிப்பிடப் பட்டுள்ளது.
பிரிவினையின் போது வங்காளத்தில் பதிவான மொத்த இடம்பெயர்வு 3.3 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1951 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 2% பேர் அகதிகள் (மேற்கு பாகிஸ்தானிலிருந்து 1.3% மற்றும் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து 0.7%) ஆவர்.
மேற்கு இந்தியாவை விட்டு வெளியேறிய சுமார் 1.3 மில்லியன் முஸ்லிம் மக்கள் பாகிஸ்தானைச் சென்று அடையவில்லை.
மேற்கு எல்லையில் காணாமல் போன இந்துக்கள்/சீக்கியர்களின் எண்ணிக்கை தோராயமாக 0.8 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.