2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை 81 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் புலிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 114 புலிகளின் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இது புலிகளின் உயிரிழப்புகளில் பதிவான 29 சதவீத சரிவைக் குறிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 178 புலிகள் உயிரிழந்ததால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இயற்கை காரணங்கள் மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் மொத்தம் 628 புலிகள் இறந்துள்ளன.
இதற்கிடையில், இந்த காலக் கட்டத்தில் மட்டும் 349 பேர் புலிகளின் தாக்குதலில் கொல்லப் பட்டனர் என்ற நிலையில் இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 200 பேர் உயிர் இழந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் 96 புலிகள், 2020 ஆம் ஆண்டில் 106, 2021 ஆம் ஆண்டில் 127, 2022 ஆம் ஆண்டில் 121 மற்றும் 2023 ஆம் ஆண்டில் 178 புலிகள் இறந்துள்ளன.