புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சகம் (MoSPI) ஆனது, ‘இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2023’ என்ற தலைப்பிலான அதன் 25வது அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2036 ஆம் ஆண்டில், 2011 ஆம் ஆண்டில் இருந்த 48.5 சதவீதத்துடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை 48.8% ஆக சற்று மேம்பட்டுள்ளதுடன் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15 வயதிற்குட்பட்ட நபர்களின் விகிதம் ஆனது 2011 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 2036 ஆம் ஆண்டில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டில் 943 ஆக இருந்த பாலின விகிதம் ஆனது 2036 ஆம் ஆண்டிற்குள் 952 ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப் பட்டுள்ள நிலையில் இது பாலினச் சமத்துவத்தில் நேர்மறையானப் போக்கை எடுத்துக் காட்டுகிறது.
20 முதல் 24 வயது வரையில் மற்றும் 25 முதல் 29 வரையிலான வயதிற்குட்பட்டவர்களில் முறையே 135.4 மற்றும் 166.0 ஆக இருந்த வயது சார் கருவுறுதல் விகிதம் (ASFR) ஆனது 113.6 மற்றும் 139.6 ஆகக் குறைந்துள்ளது.
மேற்கண்ட காலக் கட்டத்திற்கு 35 முதல் 39 வயதினரில் 32.7 ஆக இருந்த ASFR விகிதம் ஆனது 35.6 ஆக அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் கல்வியறிவு இல்லாதவர்கள் மத்தியில் 11.0 ஆக இருந்த இளம்பருவ கருவுறுதல் விகிதம் ஆனது கல்வியறிவு உள்ளவர்கள் மத்தியில் 33.9 ஆக இருந்தது.
2015 ஆம் ஆண்டில் 43 ஆக இருந்த உயிரிழப்பு விகிதம் ஆனது 2020 ஆம் ஆண்டில் 32 ஆகக் குறைந்துள்ளது என்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் காட்டுகிறது.
பெண் குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் ஆனது எப்போதும் ஆண் குழந்தைகளின் உயிரிழப்பு விகிதத்தினை விட அதிகமாக இருந்தது, ஆனால் 2020 ஆம் ஆண்டில், 1000 பிறப்புகளுக்கு சுமார் 28 குழந்தைகள் என்ற அளவில் இந்த உயிரிழப்பு விகிதம் இரு பிரிவுகளிலும் சமமாக இருந்தது.