இந்திய மண் மற்றும் நிலப் பயன்பாட்டு கணக்கெடுப்பு (SLUSI) ஆனது, மண் வளத் தகவல் பதிவு அட்டை (SHC) தரவைப் பயன்படுத்தி புவி இடஞ்சார்ந்த நுட்பங்கள் மூலம் மாவட்டம்/கிராம வாரியான எண்ணிம மண் வளம் குறித்த சில வரைபடங்களை உருவாக்குகிறது.
மண் வள வரைபடங்கள் ஆனது, மண்ணின் ஊட்டச்சத்துக் கலவை மற்றும் வளம் பற்றிய விரிவான இடஞ்சார்ந்த தகவல்களை வழங்குகின்றன.
இது விவசாயிகளுக்கு உரங்களைப் பயன்படுத்துவதற்கும் மண் சீரமைப்பினை மிக முறையாக மேற்கொள்வதற்கும் உதவுகிறது என்பதோடு இது உரத்தின் அதிகப் படியான பயன்பாடு அல்லது குறைவானப் பயன்பாட்டினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
தொலை உணர்திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகள் உள்ளிட்ட புவிசார் நுட்பங்கள் மண் வள வரைபட உருவாக்கத்தில் பயன்படுத்தப் படுகின்றன.
இந்திய அரசாங்கத்தின் மண் நலம் மற்றும் வளம் என்ற திட்டத்தின் கீழ் மண் வள அட்டைகள் உருவாக்கப்படுகின்றன.