இந்தியாவில் மீத்தேன் தணிப்பான்
August 13 , 2024
102 days
180
- மிகப் பிரதானமாக மேற்கு இந்தியாவில் உள்ள நெல் வயல்களிலும் ஈரநிலங்களிலும் உள்நாட்டு மீத்தேன்-தணிப்பு காரணிகளின் முதல் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன.
- மீத்தேன் ஒரு சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயு ஆகும் என்பதோடு இது கார்பன் டை ஆக்சைடை விட 26 மடங்கு புவியை வெப்பமாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
- இது மீத்தனோட்ரோப்ஸ் எனப்படுகின்ற மீத்தேன் உண்ணும் பாக்டீரியாக்களால் இயற்கையாகவே குறைக்கப்படுகின்றன.
- மெத்திலோகுகுமிஸ் ஒரைசே பாக்டீரியம் ஒரு புதியப் பேரினம் மற்றும் பாக்டீரிய இனமாகும்.
- இந்த பாக்டீரியாக்கள் மீத்தேன் வாயுக்களை ஆக்சிஜனேற்றம் செய்து, CO2 மற்றும் H2O ஆகியவற்றினை உருவாக்கி, அதன் மூலம் மீத்தேன் உயர்வினைத் தடுக்கிறது.
- மெத்திலோகுகுமிஸ் ஒரைசே என்பது நெற்பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பத்தோடு, முன் கூட்டியே பூக்கள் பூப்பதையும் தூண்டி, தானிய விளைச்சலை அதிகரிக்கிறது.
Post Views:
180