உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது முந்தைய திட்டத்தை மாற்றி அமைத்து மாற்றியமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது.
மேலும் இது நிதி உதவியை விரிவுபடுத்துவதற்கும் சேர்த்துப் பயன்படுத்தப் படுகின்றது.
இந்திய உணவுக் கழகத்திலிருந்துப் பெறப்படும் மக்காச்சோளம் மற்றும் அரிசி அகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்க வேண்டிய வடிசாலைகளை அமைப்பதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
இது 2025 ஆம் ஆண்டில் 20% அளவிலான கலவையை அடைவதையும், நாட்டில் எத்தனால் உற்பத்தித் திறனின் தேவையைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வேண்டி இறக்குமதியைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கும் நோக்கில் 2030 ஆம் ஆண்டளவில் இந்தியாவுக்குச் சுமார் 1,000 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படும்.
இந்தியா தற்போது 684 கோடி லிட்டர் அளவிற்கு எத்தனாலை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டு உள்ளது.
முதலாம் தலைமுறை (1 ஜி) எத்தனால் ஆனது தானியங்கள் (அரிசி, கோதுமை, பார்லி, மக்காச் சோளம் மற்றும் சோளம்), கரும்பு மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றின் தீவனப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுகிறது.
இந்த நடவடிக்கை சர்க்கரைத் துறை மற்றும் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாகக் கருதப் படுகிறது.
2016-17 ஆண்டைத் தவிர, 2010-11 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் சர்க்கரை அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது (அப்போது வறட்சி காரணமாக உற்பத்தி குறைந்தது).