TNPSC Thervupettagam

இந்தியாவில் முதியோர் பராமரிப்புச் சீர்திருத்தங்கள்

March 7 , 2024 135 days 222 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, 'இந்தியாவில் முதியோர் பராமரிப்புச் சீர்திருத்தங்கள் - முதியோர் பராமரிப்பு அணுகுமுறையினை மறுவடிவமைத்தல்' என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • நிதி ரீதியாக முதியோர்களை மேம்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் அவர்களை முழுமையாக ஒருங்கிணைப்பதற்கும் தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் ஆனது சுகாதாரம், சமூகம், பொருளாதாரம் / நிதி மற்றும் எண்ணிம துறை ஆகியவற்றில் அதிகாரமளித்தல், சேவை வழங்குதல் மற்றும் உள்ளடக்கல் ஆகியவற்றின் அடிப்படையில், தேவைப்படும் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை வகைப்படுத்துகின்றன.
  • தற்போது இந்தியாவின் மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக (சுமார் 104 மில்லியன்) முதியோர்கள் உள்ளனர்.
  • இது 2050 ஆம் ஆண்டிற்குள் மொத்த மக்கள் தொகையில் 19.5% ஆக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்