இந்தி மொழி பேசாதவர்கள் பொதுவாக புதிய மொழிகளைக் கற்க தயாராக உள்ளனர், அதே நேரத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் மிக குறைவான பன்மொழித் தன்மையைக் கொண்டுள்ளனர்.
1991 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பேசும் 84.5% நபர்கள் (மாநிலத்தில் தமிழ் மொழியை முதல் மொழியாகப் பேசுபவர்கள்) ஒருமொழி பேசுபவர்களாக இருந்தனர், இது 2011 ஆம் ஆண்டில் 78% ஆகக் குறைந்தது.
இதே போல், ஒடிசாவில் தாய்மொழியாக ஒடியா மொழி பேசுபவர்களின் (ஒருமொழி பேசும் நபர்கள்) பங்கு 86 சதவீதத்திலிருந்து 74.5% ஆகக் குறைந்தது.
இதற்கு நேர்மாறாக, இந்தி மொழி முதன்மையான மொழியாக இருக்கும் சில மாநிலங்களில் ஏற்கனவே ஒரு மொழி பேசுபவர்களின் பங்கு மிக அதிகமாக இருந்தது, என்பதோடு மேலும் பல சூழல்களில் இந்தப் பங்கானது காலப்போக்கில் அதிகரித்தது.
உதாரணமாக, 1991 ஆம் ஆண்டில், பிரிக்கப் படாத பீகார் மாநிலத்தில் இந்தி மொழி பேசுபவர்களில் 90.2% பேர் ஒருமொழி பேசுபவர்களாக இருந்தனர்.
2011 ஆம் ஆண்டில், பிரிக்கப்பட்ட பீகாரில், இந்த எண்ணிக்கை 95.2% ஆக உயர்ந்தது.
இதே போல், இராஜஸ்தானில் 1991 ஆம் ஆண்டில் இந்தி மொழி பேசுபவர்களில் 93% ஆக இருந்த ஒரு மொழி பேசுபவர்களின் பங்கு ஆனது 2011 ஆம் ஆண்டில் 94.3% ஆக அதிகரித்தது.
தமிழ்நாட்டில், 1991 ஆம் ஆண்டில் 13.5% தமிழ் பேசுபவர்கள் ஆங்கில மொழியையும் பேசுபவர்களாக உள்ளனர், இது 2011 ஆம் ஆண்டில் 18.5% ஆக உயர்ந்தது.
இதற்கு நேர்மாறாக, ஹரியானாவில், ஆங்கில மொழியையும் பேசும் இந்தி மொழி பேசுபவர்களின் பங்கு ஆனது அதே காலக் கட்டத்தில் 17.5 சதவீதத்திலிருந்து 14.6% ஆகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில், 1991 ஆம் ஆண்டில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட 0.5% பேர் மட்டுமே இந்தி மொழியை பேசினர் என்பதோடு இந்த எண்ணிக்கை ஆனது 2011 ஆம் ஆண்டில் 1.3% ஆக சற்று உயர்ந்தது.
ஆனால், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இந்தி மொழியையும் பேசும் தாய்மொழி பேசுபவர்களின் பங்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவானது.