TNPSC Thervupettagam

இந்தியாவில் லிச்சி சாகுபடி

January 2 , 2024 332 days 297 0
  • லிச்சிப் பழம் (விழுதிப் பழம்) தற்போது 19 இந்திய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
  • இந்த இனிப்பு சுவை பழச்சாறு மிக்க பழம் ஆனது முன்னதாக பீகாரில் உள்ள முசாபர்பூர் நகரில் மட்டுமே விளைவிக்கப் பட்டது.
  • இந்தப் பழம் முக்கியமாக உத்தரக்காண்ட், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அமைந்த இமயமலை அடிவாரப் பகுதிகளில் வளர்க்கப் படுகிறது.
  • பீகாரில் மட்டும் 32,000 ஹெக்டேருக்கு மேலான பரப்பளவில் லிச்சி சாகுபடி செய்யப் படுகின்றது.
  • இது இந்தியாவின் லிச்சி உற்பத்தியில் சுமார் 40 சதவிகிதம் ஆகும்.
  • பீகாரைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் (மொத்தத்தில் 12 சதவீதம்) மற்றும் ஜார்க்கண்ட் (10 சதவீதம்) ஆகியவை பங்கினை கொண்டுள்ளன.
  • பீகாரின் முசாபர்பூர் நகரம் அதன் அபரிதமான லிச்சி பழங்களின் உற்பத்தி காரணமாக இந்தியாவின் இனிப்பு நகரம் என்று அழைக்கப் படுகிறது.
  • முசாபர்பூர் நகரம் இந்தியாவில் லிச்சி பழங்களின் உற்பத்தியில் ஒரு முன்னணி நகரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்