இந்தியாவில் வங்கிகளின் போக்கு மற்றும் முன்னேற்றம் பற்றிய அறிக்கை 2023
December 29 , 2024 24 days 90 0
2023-24 ஆம் ஆண்டில் வங்கிகளின் இலாபம் என்பது தொடர்ந்து ஆறாவது ஆண்டாக மேம்பட்டுள்ளது.
அவற்றின் மொத்த வாராக் கடன்கள் அல்லது NPAகள் ஆனது, 13 ஆண்டுகளில் இல்லாத அளவு 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வங்கிகளின் இலாபம் 2023-24 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உயர்ந்து உள்ளது, மேலும்,2024-25 ஆம் அரையாண்டில் தொடர்ந்து உயர்ந்தது.
அவற்றின் சொத்து மீதான வருமானம் (RoA) சுமார் 1.4 சதவீதமாகவும், பங்கு மீதான வருமானம் (RoE) 14.6 சதவீதமாகவும் அதிகரித்தது.
மொத்த வாராக் கடன்கள் (NPA) விகிதம் ஆனது, 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 2.7 சதவீதமாகவும், செப்டம்பர் மாத இறுதியில் 2.5 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், இந்தியாவின் வணிக வங்கித் துறையில் 12 பொதுத் துறை வங்கிகள் (PSB), 21 தனியார் துறை வங்கிகள் (PVB), 45 வெளிநாட்டு வங்கிகள் (FBs), 12 சிறு நிதி வங்கிகள் (SFB), ஆறு பொது வங்கிகள் (PB), 43 பிராந்திய ஊரக வங்கிகள் (RRB) மற்றும் இரண்டு உள்ளூர் பகுதி வங்கிகள் (LAB) உள்ளன.
இந்த 141 வணிக வங்கிகளில், 137 வங்கிகள் பட்டியலிடப்பட்ட வங்கிகளாகவும், நான்கு பட்டியலிடப்படாத வங்கிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
NBFC வங்கிகளின் GNPA விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் 3.4 சதவீதமாகக் குறைந்தது.