இந்தியாவில் வருமானச் சமத்துவமின்மைப் போக்குகள் 2023
January 10 , 2025 3 hrs 0 min 18 0
இந்தியாவின் கடும் வருமானச் சமத்துவமின்மையானது 2023 ஆம் ஆண்டில் 1950 ஆம் ஆண்டுகளில் இருந்ததை விட அதிகமாக இருந்தது.
இந்தியாவிற்கான கினி குணகம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 0.410 ஆக இருந்தது என்ற நிலையில் இது 1955 ஆம் ஆண்டில் 0.371 ஆக இருந்தது.
முன்னதாக, 2021 ஆம் ஆண்டில், பெருந்தொற்றின் பாதகமானத் தாக்கத்தினால், கினி குணகம் 0.528 ஆக உயர்ந்தது.
1955 ஆம் ஆண்டில் சுமார் 3 சதவீதமாக இருந்த ‘அடிமட்டத்தில் உள்ள 10 சதவீதக் குடும்பங்களின் வருமானம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 2.38 சதவீதமாகக் குறைந்தது.
இதற்கிடையில், ‘அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதம்’ குடும்பங்களின் பங்கு ஆனது 22 சதவீதத்தில் இருந்து 22.82 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது.
கினி குணகம் என்பது பொருளாதாரத்திற்குள் தனி நபர்கள் அல்லது குடும்பங்களுக்கு இடையேயான வருமானப் பகிர்வு எந்த அளவிற்குச் சமமான நிலையிலிருந்து விலகி உள்ளது என்பதை அளவிடுகிறது.
0 என்ற கினி குறியீடுயானது முழுமையானச் சமத்துவத்தினைக் குறிக்கிறது, அதே சமயம் 1 ஆனது முழுமையான சமத்துவமின்மையைக் குறிக்கிறது.
இதன் அதிக மதிப்பு, அதிக வருமான சமத்துவமின்மையைக் குறிக்கிறது.
உலக சமத்துவமின்மை தரவுத் தளத்தின்படி, 2023 ஆம் ஆண்டில் தேசிய வருமானத்தில் சுமார் 22.6 சதவீத வருமானத்தினை ‘உயர்மட்ட1 சதவீதத்தில் உள்ள நபர்கள்’ கொண்டு உள்ளனர்.