இந்தியாவில் வருமானம் மற்றும் செல்வ வளத்தில் நிலவும் சமத்துவமின்மை 1922-2023
March 27 , 2024 246 days 247 0
“இந்தியாவில் வருமானம் மற்றும் செல்வ வளத்தில் நிலவும் சமத்துவமின்மை, 1922-2023: பில்லியனர்கள் இராஜ்ஜியத்தின் எழுச்சி” என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
சமத்துவமின்மையானது இந்தியாவில் 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து அதிகரித்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டில், நாட்டின் மக்கள்தொகையில் அதிக செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானம் மற்றும் செல்வ வளத்தின் பங்குகள் ஆகியவை முறையே 22.6 சதவீதம் மற்றும் 40.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்குள், அதிக செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானம் மற்றும் செல்வ வளத்தின் பங்குகள் ஆனது (22.6 சதவீதம் மற்றும் 40.1 சதவீதம்) இது வரையில் இல்லாத அளவிற்கான மிக அதிக அளவில் இருந்தன.
இந்தியாவின் அதிக செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானப் பங்கு, தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பதிவானதை விடவும், உலகிலேயே மிக அதிகமானதாகவும் உள்ளது.
1950 ஆம் ஆண்டுகளில் அதிகரித்த, அதிக செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானப் பங்குகள் ஆனது, அடுத்த இருபது ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து 1982 ஆம் ஆண்டில் 6.1 சதவீதத்தை எட்டியது.
அடுத்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து 2022 ஆம் ஆண்டில், 22.6 சதவீதத்தை எட்டி இதுவரையில் இல்லாத அளவிற்கு இது உயர்ந்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் சுமார் 167 பணக்காரக் குடும்பங்களின் நிகரச் செல்வத்தின் மீது விதிக்கப் படும் இரண்டு சதவீத "மிகை வரி" ஆனது தேசிய வருமானத்தில் 0.5 சதவீத வருவாயினை ஈட்டும்.
1922 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்த, அதிகச் செல்வ வளம் மிக்க ஒரு சதவீத மக்களின் வருமானப் பங்கு ஆனது, இரு போர்களுக்கு இடைபட்ட காலத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.