TNPSC Thervupettagam

இந்தியாவில் வாய் புற்றுநோய்ப் பாதிப்பு

October 17 , 2024 39 days 90 0
  • தெற்காசியாவில் புகையற்ற புகையிலை (மெல்லுதல், உறிஞ்சுதல் அல்லது முகர்தல்) மற்றும் பாக்கு (வெற்றிலைப் பாக்கு என்றும் அழைக்கப்படுகிறது) ஆகியவற்றினால் ஏற்படும் வாய்வழிப் புற்றுநோய்களின் எண்ணிக்கையில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 1,20,200 பாதிப்புகளில் சுமார் 83,400 பாதிப்புகளைக் கொண்டுள்ளது.
  • உலகளவில் உள்ள அனைத்து வாய் வழிப் புற்றுநோய்களில் சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் புகையில்லா புகையிலைகளின் காரணமாக ஏற்படுகின்றன.
  • இந்தப் பாதிப்புகளில் மிக அதிகப் பங்கினை கொண்டுள்ள பகுதியான தென்-மத்திய ஆசியாவில் (மொத்தம் 105,500 பாதிப்புகள்)  இந்தியாவில் 83,400 பாதிப்புகள், வங்காள தேசத்தில் 9,700 பாதிப்புகள், பாகிஸ்தானில் 8,900 பாதிப்புகள் மற்றும் இலங்கையில் 1,300 பாதிப்புகள் உள்ளன.
  • அதைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மொத்தம் 3,900 பாதிப்புகளில், மியான்மரில் 1,600 பாதிப்புகள், இந்தோனேசியாவில் சுமார் 990 பாதிப்புகள் மற்றும் தாய்லாந்தில் 785 பாதிப்புகள் உள்ளன.
  • கிழக்கு ஆசியாவில் உள்ள மொத்தம் 3,300 பாதிப்புகளில்  சீனாவில் மட்டும் சுமார் 3,200 பாதிப்புகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்