மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் இயல்பை விட அதிக வெப்பமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வானிலை துணைப் பிரிவுகள் மற்றும் வடமேற்கு இந்தியாவிலிருக்கும் சில துணைப் பிரிவுகள் ஆகியவற்றில் நிலவும் வெப்பநிலையை விட சராசரி அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
வெப்ப அலைகள்
உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, தொடர்ந்து 5 நாட்களின் தினசரி அதிகபட்ச வெப்பநிலையானது சராசரி அதிகபட்ச வெப்பநிலையான 5 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டும் போது வெப்ப அலை ஏற்படுகின்றது.
வெப்ப அலைகளின் போது, வானிலையானது அதிக வெப்பமுடனும் அதிக ஈரப் பதத்துடன் இருக்கும்.
வெப்ப அலைகள் பொதுவாக கடல்சார் (கடலை ஒட்டிய) நாடுகளில் நிகழ்கின்றன.