TNPSC Thervupettagam

இந்தியாவில் வெப்ப அலைகள் (அனல் காற்று)

March 3 , 2020 1731 days 992 0
  • மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் இயல்பை விட அதிக வெப்பமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
  • மத்திய இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வானிலை துணைப் பிரிவுகள் மற்றும் வடமேற்கு இந்தியாவிலிருக்கும் சில துணைப் பிரிவுகள் ஆகியவற்றில் நிலவும் வெப்பநிலையை விட சராசரி அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

வெப்ப அலைகள்

  • உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, தொடர்ந்து 5 நாட்களின் தினசரி அதிகபட்ச வெப்பநிலையானது சராசரி அதிகபட்ச வெப்பநிலையான 5 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டும் போது வெப்ப அலை ஏற்படுகின்றது.
  • வெப்ப அலைகளின் போது, வானிலையானது அதிக வெப்பமுடனும் அதிக ஈரப் பதத்துடன் இருக்கும்.
  • வெப்ப அலைகள் பொதுவாக கடல்சார் (கடலை ஒட்டிய) நாடுகளில் நிகழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்