சமீபத்தில் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையமானது (CMIE - Centre for Monitoring Indian Economy) இந்தியாவில் தற்போதைய வேலைவாய்ப்பின்மை நிலைமை குறித்த ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது.
நாடு முடக்கப்பட்டதிலிருந்து ஏறத்தாழ 20%ற்கும் மேற்பட்ட இந்தியப் பொருளாதாரமானது தனது வேலைவாய்ப்பை இழந்துள்ளது.
மார்ச் மாதத்திற்கான வேலைவாய்ப்பின்மை விகிதமானது 8.7% ஆக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 7.8% ஆக இருந்தது.
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பின்மை அறிக்கையை வெளியிடுகின்றது.
2019 ஆம் ஆண்டில், வேலைவாய்ப்பின்மை விகிதமானது 6.1% ஆக இருந்தது.
இந்திய வரலாற்றில் கடந்த 45 ஆண்டுகளில் அதிக சதவிகிதம் இதுவாகும்.