இந்திய விமானப்படை மற்றும் இங்கிலாந்தின் ராயல் விமானப்படை இணைந்து இந்திர தனுஷ் என்ற பயிற்சியின் 5ஆவது பதிப்பை உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹிந்தான் விமானப் படை நிலையத்தில் தொடங்கியது.
இரு விமானப் படைகளுக்கும் இடையிலான பரஸ்பர செயல்பாட்டுப் புரிதலை மேம்படுத்த இந்தப் பயிற்சி மேற்கொள்ளப் படுகிறது.
‘அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் படைபலம்’ இப்பயிற்சியின் நோக்கமாக அமைந்துள்ளது.
இந்த பயிற்சியின் முதல் பதிப்பு 2006 இல் நடத்தப் பட்டது.