TNPSC Thervupettagam
October 17 , 2017 2467 days 750 0
  • “இந்திரா” என்பது இந்தியா மற்றும் இரஷ்யாவிற்கு இடையேயான கூட்டுப் போர் பயிற்சியாகும்.
  • இதுவரை ஒற்றை ஆயுதப் படைகளுக்கான (Single Service exercise) கூட்டுப் போர் பயிற்சியாக இருநாடுகளின் ஆயுதப்படைகளுக்கிடையே கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியா மற்றும் இரஷ்யாவில் மாறிமாறி நடத்தப்பட்டு வந்தது.
  • இவ்வருடம் இருநாடுகளின் இராணுவத்தின் முப்படைகளும் (தரைப்படை, கடற்படை, விமானப்படை) பங்கேற்கும் விதத்தில் இக்கூட்டுப் போர் பயிற்சி மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இதுதான் முப்படைகளும் பங்குபெறும் உலகின் முதல் சர்வதேச கூட்டுப் போர் பயிற்சியாகும்.
  • இரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற உள்ள இக்கூட்டுப் போர் பயிற்சியின் முக்கிய நோக்கம்- பயங்கரவாத எதிர்ப்பு ஆகும்.
  • 2014ஆம் ஆண்டு “Avia Indra – ஏவியா இந்திரா” எனும் விமானப் படைகளுக்கான கூட்டுப் போர் பயிற்சிகளில் இருநாட்டு விமானப்படைகளும் கலந்து கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்