TNPSC Thervupettagam
June 25 , 2018 2219 days 646 0
  • இந்தியா மற்றும் ரஷ்யாவின் முப்படைகளுக்கான கூட்டுப் பயிற்சியானது 2018-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய இராணுவ தளத்தில் நடைபெற உள்ளது.
  • இந்தப் பயிற்சியில், ரஷ்யாவின் கிழக்கு இராணுவ மாவட்டத்தின் ஒன்றிணைந்த இராணுவப் பிரிவுகள் பங்கு கொள்ளும்.
  • இந்திரா இராணுவப் பயிற்சியானது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கடற்படைகளின் கூட்டு ஒத்துழைப்பு மற்றும் இணைந்து செயலாற்றும் தன்மையை மேம்படுத்த 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.
  • இப்பயிற்சியின் பெயரானது INDIA மற்றும் RUSSIA என்பனவற்றிலிருந்து INDRA என்ற பெயரைப் பெற்றது.
  • இப்பயிற்சியானது முப்படைகளின் இராணுவப் பயிற்சியாக 2017-ம் ஆண்டு மாற்றப்பட்டது. இப்பயிற்சியானது முதன் முறையாக அக்டோபர் 2017-இல் வெற்றிகரமாக ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாகில் நடைபெற்றது.
  • இது இந்தியாவின் முப்படைகளின் முதல் பயிற்சியாகும். மேலும் இது இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கிடையேயான முப்படைகளின் முதல் பயிற்சியாகும்.
  • முதன் முறையாக முப்படைகளின் இராணுவப் பயிற்சியை ரஷ்யா தனது சொந்த மண்ணில் நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்