சிலி நாட்டின் முன்னாள் அதிபர் மிச்செல் பேச்லெட் 2024 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி, ஆயுத நீக்கம் மற்றும் மேம்பாட்டிற்கான பரிசைப் பெற உள்ளார்.
மனித உரிமைகள், அமைதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் இவரின் பெரும் பங்களிப்புகளை இந்தப் பரிசு கெளரவிக்கிறது.
இவர் சிலி நாட்டின் அதிபராக 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும் பணியாற்றினார்.
அவர் 2010 முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பிற்குத் தலைமை தாங்கினார் என்பதோடு பின்னர் 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகவும் பணியாற்றினார்.
சிலி நாட்டுடனான இந்தியாவின் உறவுகளுக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பையும் இந்த விருது அங்கீகரித்துள்ளது.
1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப் பரிசானது, சர்வதேச அமைதி மற்றும் சமூக மேம்பாட்டினை ஊக்குவிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு என்று ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.