TNPSC Thervupettagam

இந்திரா காந்தி அமைதிப் பரிசு-மன்மோகன் சிங்

November 19 , 2017 2590 days 1235 0
  • 2017-ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் வளர்ச்சிக்கான விருது (Indira Gandhi Prize for Peace, Disarmament and Development) இந்திய முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2004 முதல் 2014 வரை பத்தாண்டுகள் நாட்டைச் சிறப்பான முறையில் தலைமைத் தாங்கி வழிநடத்தியதற்காகவும், பல்வேறு சாதனைகள் புரிந்தமைக்காகவும், பாதுகாப்பு, சமூக-பொருளாதார வளர்ச்சி போன்ற பலவற்றிற்கு அவர் அளித்த மாபெரும் பங்களிப்பிற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி அமைதிப் பரிசு
  • மறைந்த முன்னாள் பிரதமர் திருமதி.இந்திரா காந்தியின் பெயரிலான இந்த சர்வதேச அமைதி விருது 1986-ல் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையால் நிறுவப்பட்டது.
  • உலக அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் புத்தாக்க முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • மேலும் இவ்விருது புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கமைவினை உருவாக்குபவர்கள் மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குலத்தின் பெரும் நன்மைக்காக பயன்படுதலை உறுதிசெய்தல் மற்றும்  சுதந்திரத்தின் வாய்ப்பு எல்லைகளை விரிவுபடுத்துதல்    போன்ற துறைகளில் பங்களிப்பினை வழங்குபவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • ஆண்டுதோறும் இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19-ஆம் தேதி இவ்விருது வழங்கப்படுகின்றது.
  • இதற்கு முன் கடைசியாக இந்த விருது 2015-ல் ஐ.நா-வின்  அகதிகளுக்கான உயர் ஆணையத்திற்கும் (UNHCR – United Nations High Commissioner for

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்