TNPSC Thervupettagam

இந்திரா பார்த்தசாரதி சாகித்திய அகாடமி

September 22 , 2021 1165 days 887 0
  • சாகித்திய அகாடமி தனது உயரிய கௌரவ தோழமைத் திட்டத்திற்கு வேண்டி 25 வருட இடைவெளிக்குப் பிறகு இந்திரா பார்த்தசாரதி என்ற ஒரு தமிழ் எழுத்தாளரைத் தேர்வு செய்துள்ளது.
  • இவர் பொதுவாக இ.பா. என்று அழைக்கப்படுகிறார்.
  • ஜெயகாந்தன் (62 வயது) 1996 ஆம் ஆண்டில் அகாடமியின் இந்த தோழமைத் திட்டத்தில் இணைந்த இளம் வயது நபர் ஆவார்.
  • இவருக்கு முன்பாக தமிழ் எழுத்துத் துறையிலிருந்து இருவர் மட்டுமே தேர்வாகினர்.
  • அவர்கள் ராஜாஜி (அ) இராஜகோபாலாச்சாரி (1969) மற்றும் T.P. மீனாட்சிசுந்தரம் (1975) ஆகியோர் ஆவர்.
  • V. ராகவன் (1979) மற்றும் K.R. ஸ்ரீனிவாச ஐயங்கார் (1985) ஆகிய இரு தமிழர்களும் தோழமைத்  திட்டத்தில் சேர்க்கப்பட்டாலும் சமஸ்கிருதம் மற்றும் இந்திய ஆங்கில மொழிப் படைப்புகளுக்கு வேண்டி அவர்கள் ஆற்றியப் பங்களிப்பிற்காகவே அது வழங்கப் பட்டது.
  • இந்திரா பார்த்தசாரதி 16 நாவல்கள், 10 நாடகங்கள் மற்றும் 6 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • இவரது அரசியல் கருப்பொருள் குறித்தப் படைப்புகளுக்காக வேண்டி இவர் பெரிதும் குறிப்பிடப் படுகிறார்.
  • அவர்  ராமானுஜர் நாடகத்தை தனது மகத்தான படைப்பாகக் கருதுகிறார்.
  • 1968 ஆம் ஆண்டு 42 ஏழை விவசாயிகள் கொல்லப்பட்ட கீழவெண்மணிப் படு கொலையின் பின்னணி பற்றி எழுதப் பட்ட குருதிப்புனல் என்ற அவரது படைப்பானது 1977 ஆம் ஆண்டில் அவருக்கு சாகித்திய அகாடமி விருதினைப் பெற்று தந்தது.
  • பாரதிய பாஷா பரிஷத் விருது மற்றும் சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட பல மதிப்பு மிக்க விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
  • சாகித்திய மற்றும் சங்கீத நாடக அகாடமி விருதுகளைப் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்