TNPSC Thervupettagam

இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்புகள்

September 14 , 2021 1075 days 538 0
  • கொளத்தூர், கீழ்ப்பாக்கம், விளாத்திக் குளம், தொப்பம்பட்டி, அணைக்கட்டு, கலசப் பாக்கம், திருக்காட்டுப்பள்ளி, லால்குடி, கடையம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் ரூ.150 கோடி செலவில் மேலும் 10 கல்லூரிகளை இந்து சமய அறநிலையத்துறை தொடங்க உள்ளது.
  • சென்னை, பழனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ரூ.5 கோடி செலவில் முதியோர் இல்லங்கள் நிறுவப்படும்.
  • ஆலயத்தின் திருமண மண்டபத்தில் திருமணம் நிகழ்த்தப்பட்டால் அதற்காக  பராமரிப்புக் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.
  • முடியிறக்கும் சடங்கும் இலவசமாக்கப் பட்டுள்ளது எனவே அந்தத் தொகையைக் கோவில் நிர்வாகமே செலுத்தும்.
  • கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பொங்கல் பண்டிகையின் போது புதிய ஆடைகள் வழங்கப் படும்.
  • திருச்சி அருகே சமயபுரத்திலுள்ள புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் நாள் முழுவதும் ‘அன்னதானம்’ வழங்கும் முறையானது அறிமுகப்படுத்தப் படும்.
  • ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதசாமி ஆலயத்தையடுத்து திருச்சி மாவட்டத்தில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் 2வது பெரிய கோயிலாக இது மாறும்.
  • சமயபுரம் கோயில் மட்டுமின்றி, திருத்தணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய ஊர்களிலுள்ள ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப் படும்.
  • சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கும் முறை 2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • திருச்செந்தூர் ஆலயத்தினைச் சீரமைக்க ரூ.150 கோடியையும் பெரிய பாளையத்திலுள்ள பவானி அம்மன் ஆலயத்தைச் சீரமைக்க ரூ.250 கோடியையும் அமைச்சர் அறிவித்தார்.
  • பழனி, சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி மற்றும் ராமேஷ்வரம் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களில் போதுமான வசதியை நிறுவுவதற்கு ரூ.250 கோடி நிதி வழங்கப் படும்.
  • கோயில்களில் பக்தர்கள் வழங்கிய சிறுசிறு ஆபரணங்களை  உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி, அவற்றை வங்கிகளில் வைத்து கோயில்களின் வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களுக்கு நிதி திரட்ட அதனை மாநில அரசு பயன்படுத்தும்.
  • திருத்தணி, பழனி, சமயபுரம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய ஊர்களிலுள்ள பெரிய கோயில்களில் தங்க ஆபரணங்கள் அதிகளவில் உள்ளன.
  • 2000 கிலோகிராம் எடையிலான தங்க ஆபரணங்களை இதன் மூலம் தங்கக் கட்டிகளாக மாற்ற இயலும்.
  • இத்துறையானது 1978 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இப்பணியைச் செய்து வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்