TNPSC Thervupettagam

இந்துகுஷ் இமயமலையில் பனிப்பாறையின் அளவில் குறைவு

June 23 , 2023 393 days 264 0
  • இந்து குஷ் இமயமலையில் உள்ள (HKH) பனிப்பாறைகளின் அளவானது 65 சதவீதம் என்ற அளவிற்கு வேகமாக குறைந்து வருகிறது.
  • இந்தப் பனிப்பாறைகளில் 2010 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டிற்கு 0.28 மீட்டர் நீருக்குச் சமமான (m w.e.) பனிப்பாறைகள் குறைந்துள்ளன.
  • இது 2000 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டிற்கு 0.17 (m w.e.) ஆக இருந்தது.
  • காரகோரம் மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகளின் அளவும் குறையத் தொடங்கி உள்ளது.
  • 2010 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இதன் பனிப்பாறைகளில் 0.09  (m w.e.) அளவில் குறைவு பதிவாகியுள்ளது.
  • இந்துகுஷ் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் தோராயமாக 73,173 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளன.
  • இப்பகுதியின் சராசரி வெப்பநிலை 1951 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஒரு தசாப்தத்திற்கு 0.28 ° C என்ற அளவில் அதிகரித்துள்ளது.
  • 2100 ஆம் ஆண்டில் , இமயமலைப் பனிப்பாறைகள் 75 சதவீத பனியை இழக்கக்கூடும்.
  • சுமார் 3,500 கிமீ (2,175 மைல்கள்) பரப்பினைக் கொண்ட இந்துகுஷ்  இமயமலையானது ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்