இரு நாட்டு மக்களுக்கிடையேயான பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் மியான்மருக்கிடையேயான நில வழி எல்லை கடத்தல் (Land border Crossing) திட்டத்திற்கு மத்திய கேபினேட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் மக்களுக்கும், மியான்மரிய மக்களுக்கும் இடையேயான பொருளாதார தொடர்பை மேம்படுத்துவதற்காகவும், இரு பகுதிகளுக்கும் இடையே நிலவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவை வைத்திருப்பதன் அடிப்படையில் மக்கள் எல்லையை கடக்க இயலும். இதனால் இரு நாட்டிற்கிடையேயான பொருளாதார மற்றும் சமூகத் தொடர்பு மேம்படும்.