TNPSC Thervupettagam

இந்தோனேசியா தன் வடக்கில் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டல கடல் பகுதியை பெயர் மாற்றம் செய்துள்ளது

July 18 , 2017 2719 days 1474 0
  • இந்தோனேசியா தன் பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதியை "தென்சீனக் கடல்" என்ற பெயரிலிருந்து "வட நட்டுனா கடல்" (North Natuna Sea) என்று ஜூலை 14, 2017 அன்று பெயர் மாற்றம் செய்தது.
  • சீனாவின் பிராந்திய பேராசைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சமீபத்திய செயல் இதுவாகும்.
  • மறுபெயரிடப்பட்ட பகுதியின் ஒரு பகுதி ஆனது சீனாவின் ஒன்பது - கோடு எல்லைக்குள் (nine - dash line) அமைந்துள்ளது. இப்பகுதி சீனாவின் ஹைனன் தீவின் தெற்கு மற்றும் கிழக்கு திசையில் பல நூறு மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
  • தென் சீனக் கடல் பகுதியின் பெயரை முதன்முதலாக இந்தோனேசியா மட்டும் மாற்றவில்லை. இதற்கு முன் 2011ல் பிலிப்பைன்ஸ் தன் கடல் பகுதிகளை "மேற்கு பிலிப்பைன் கடல்" என்று பெயர் மாற்றம் செய்தது. மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து பிராந்திய சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது.
  • இதையடுத்து ஜூலை 2016ல், பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பாயம் தென் சீனக் கடலின் பெரும்பகுதியை சீனா வரலாற்று அடிப்படையில் உரிமை கோர எந்த விதமான சட்ட அடிப்படையும் இல்லை என்று கூறியது.
தென் சீனக் கடல் சர்ச்சை
  • தென் சீனக் கடல் முழுவதும் தனக்கே சொந்தம் என்று சீனா கூறி வருகின்றது. தென் சீனக் கடலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உரிமை கோரும் மற்ற நாடுகள் தைவான், இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருனே. தென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும்.
  • தென்சீனக் கடலானது சுமார் 35 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எட்டு கடலை ஒட்டிய நாடுகள் / பிரதேசங்களைக் கொண்டுள்ளது. அவையாவன சீனா, தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, புருனே, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம்.
  • இந்தக் கடல் சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ளது. உலகின் 50 சதவீதத்துக்கும் அதிகமான சரக்குக் கப்பல்கள் இந்தப் பகுதியினை கடந்து செல்கின்றன. இந்தக் கடலில் பெட்ரோலியம், கனிமம் மற்றும் மீன்பிடி வளங்கள் மிகவும் நிறைந்துள்ளன.
  • இருநூறுக்கும் மேற்பட்ட தீவுகள், பவளப் பாறைகள், நீரடித் திடல் (Shoals) , நீரடி மணல் திட்டுகள் (Sandbars) நிறைந்த இப்பகுதி ஸ்பாரட்லிஸ், பாராசெல்ஸ் மற்றும் ப்ரதஸ் (Spratlys, Paracels and Pratas) என்று மூன்று தீவுக் கூட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளன.
  • மக்கிலெஸ்ஃபீல்ட் மீன்பிடிப் பரப்பு (Macclesfield bank) மற்றும் ஸ்கார்பரோ நீரடித்திடல் (Scarborough Shoal) ஆகியவை தென் சீனக் கடலின் பகுதியாகும். பல நாடுகளும் தென் சீனக் கடலில் தங்களது பிராந்திய உரிமைகளை வலியுறுத்தி வருகின்றன. இது ஆசிய நாடுகளுக்கு இடையேயான முரண்பாட்டின் அபாயகரமான புள்ளியாகக் கருதப்படுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்