- அலுவல்பூர்வமாக டைஹாட்சு இந்தோனேசியா மாஸ்டர்ஸ் 2019 என்றறியப்படும் பூப்பந்தாட்ட போட்டித் தொடரான இந்தோனேசியா மாஸ்டர்ஸ் 2019 பட்டம் ஆனது இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்றது.
- இந்த போட்டியானது உலக பூப்பந்தாட்ட கூட்டமைப்பின் அங்கீகாரத்துடன் இந்தோனேசியாவின் பூப்பந்தாட்ட சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
- இந்தியாவில் சாய்னா நெஹ்வால் மகளிர்க்கான ஒற்றையர்க்கான பிரிவில் தனது முதல் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பட்டத்தை ஸ்பெயினின் கரோலினா மரின் காயத்தின் காரணமாக இறுதிப் போட்டியில் வெளியேறியதால் வென்றார்.
- உலகின் முதலிடத்தில் உள்ள ஆட்டக்காரரான ஜப்பானின் கென்டோ மோமோடாவை வீழ்த்தி டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சென் தனது முதலாவது இந்தோனேசிய மாஸ்டர் பட்டத்தை வென்றார். மேலும்
- ஆடவர் இரட்டையர் பிரிவில் – மார்கஸ் பெர்னால்டி கிதியோன் & கெவின் சஞ்சயா (இந்தோனேசியா),
- பெண்கள் இரட்டையர் பிரிவில் – அயகா தகாஹாஷி & மிசாகி மாட்சூட்டோமோ (ஜப்பான்),
- கலப்பு இரட்டையர் பிரிவில் – ஜெங் சியாவி & ஹீவாங் யாகியாங் (சீனா)
ஆகியோரும் பட்டம் வென்றனர்.