இந்தியாவில் பருவகாலக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசின் H3N2 எனப்படும் துணை வகை வைரஸ் தொற்றினால் இரண்டு நபர்கள் பலியாகியுள்ளனர்.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தினைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் இந்த ஆண்டில் H3N2 பாதிப்பினால் பலியான முதல் நபர் ஆவார்.
பொதுவாக என்பது மனிதரைச் சாராத இன்ஃப்ளூயென்ஸா வைரஸ் எனப்படும் H3N2 என்பது பொதுவாக பன்றி இனங்களில் பரவுவதோடு மனிதர்களையும் பாதிக்கிறது.
இந்த வைரஸ் ஆனது இன்ஃப்ளூயென்ஸா A வைரஸின் துணை வகை என்று அறியப் படுகிறது.
இதற்கான அறிகுறிகள் பருவகாலக் காய்ச்சலை ஏற்படுத்தச் செய்யும் வைரஸ்களின் அறிகுறிகளைப் போலவே இருப்பதோடு இதில் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளும் அடங்கும்.
H3N2 தொற்றுகள் ஆனது "உண்மையில் மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை" மற்றும் வழக்கமான காய்ச்சலை விட கடுமையானவையாகும்.