செவ்வாய்க் கிரகத்தின் திரவ இரும்பு கருவமானது முழுமையாக உருகிய சிலிக்கேட் அடுக்குகளால் சூழப்பட்டுள்ளது.
இன்சைட் செவ்வாய்க் கோள் தரையிறங்கு கலமானது, செவ்வாய் கிரகத்தின் உள் பகுதியில் ஊடுருவிச் செல்லும் நில அதிர்வு அலைகளை பதிவு செய்வதற்கான உட்பகுதி கட்டமைப்பின் நில அதிர்வு சோதனைக் கருவி (SEIS) என்ற கருவியைப் பயன்படுத்தியது.
பூமியைப் போலல்லாமல் செவ்வாய்க் கோளின் கருவத்தினைச் சுற்றி உருகிய அடுக்கு உள்ளது.
செவ்வாய்க் கிரகத்தின் திரவ இரும்பு-நிக்கல் கருவமானது சுமார் 150 கிலோமீட்டர் தடிமன் கொண்ட உருகிய சிலிக்கேட் பாறையால் சூழப்பட்டுள்ளது என்று இந்தப் புதிய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இந்த மேல் அடுக்கு ஆனது முன்னதாக கருவத்தின் மேற்பரப்பு என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
2,080 மைல் விட்டம் கொண்ட கருவத்தின் அளவானது, முன்பு நினைத்ததை விட 30% அளவு சிறியதாக இருக்கக்கூடும்.