இன்ஜெனூட்டி எனப்படும் நாசாவின் செவ்வாய்க் கிரக ஆய்விற்கான எந்திர ஹெலிகாப்டர் ஆனது, மற்றொரு கிரகத்தில் இயங்குகின்ற மற்றும் கட்டுப்படுத்தப் பட்ட விமான இயக்கத்தினை அடைந்த முதல் வாகனம் ஆகும்.
இன்ஜெனுய்ட்டி, செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் முன்னதாக திட்டமிட்டதை விட 14 மடங்கு அதிகமாக இயங்கியது.
இது 72 விமான இயக்கம் மூலமாக 10.5 மைல்கள் (17 கிமீ) தூரத்தை கடந்தது.
இது எட்டிய உச்சக் கட்ட உயரம் 78.7 அடி (24 மீட்டர்) ஆக அளவிடப்பட்டுள்ளது.