பிரிட்டன் மற்றும் அதன் ஒன்பது பங்குதார நாடுகள் இன்டர்ஃப்ளெக்ஸ் என்ற ஒரு நடவடிக்கையின் கீழ் உக்ரேனிய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றன.
இது உக்ரைனின் ஆயுதப் படைகளுக்குப் பயிற்சி அளித்து ஆதரவளிக்கும் பிரிட்டன் தலைமையிலான பன்னாட்டு இராணுவ நடவடிக்கையாகும்.
இது ஆயுதங்களைக் கையாளுதல், பல்வேறு இராணுவச் செயல்பாடு, துப்பாக்கிச் சுடுதல் திறன், இராணுவக் கள ஆய்வுத் தொழில்நுட்பங்கள், களம் சார்ந்த உத்திகள், போர்க்கள விபத்து சார்ந்தப் பயிற்சிகள், வெடிமருந்து எதிர்ப்பு அமைப்புகள், ஆயுத மோதல் சட்டங்கள், முதலுதவி மற்றும் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகிய கருத்துக்கள் குறித்து கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக 2015 ஆம் ஆண்டில், ஆர்பிட்டல் நடவடிக்கையின் கீழ், பிரிட்டன் இராணுவம் ஆனது உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி அளித்து ஆதரவு அளித்தது.
ஆனால் இதன் முந்தைய வடிவங்களைப் போலல்லாமல், இந்த இன்டர்ஃப்ளெக்ஸ் நடவடிக்கையானது ஐக்கியப் பேரரசு நாட்டினைச் சுற்றி மட்டுமே நடக்கிறது.