மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியம் ஆகியவற்றின் சார்பாக நேரடி மற்றும் மறைமுக வரிகளை வசூலிப்பதற்கு இன்டஸ்இன்ட் வங்கியிடம் இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்மூலம் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ‘இன்டஸ்நெட்’ மற்றும் ‘இன்டஸ் மொபைல்’ போன்ற தளங்கள் மூலம் தங்கள் நேரடி மற்றும் மறைமுக வரிகளைச் செலுத்த முடியும்.