முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
விபத்து நடந்த 48 மணி நேரத்திற்குள் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவுகளை அரசே செலுத்தும் என்பதை இத்திட்டம் உறுதி செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ், அனைத்து மருத்துவச் சேவைகளும் உள்ளடக்கப்படும்.
மாநிலம் முழுதும் உள்ள 609 மருத்துவமனைகளில் மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
அவற்றுள் 204 அரசு மருத்துவமனைகள் மற்றும் 405 தனியார் மருத்துவமனைகள் அடங்கும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியில்லாத நபர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவர்.
நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒத்துழைப்புடன் இந்த இலவசச் சிகிச்சையானது வழங்கப்படும்.