TNPSC Thervupettagam
November 16 , 2018 2121 days 606 0
  • இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை (ISF - Infosys Science Foundation) தனது 10-வது ஆண்டு விழாவில் இன்போசிஸ் பரிசு 2018-க்கான ஆறு வெற்றியாளர்களை வெவ்வேறு பிரிவுகளில் அறிவித்துள்ளது.
    • நவகாந்தா பட் - பொறியியல் மற்றும் கணினி அறிவியல்
    • கவிதா சிங் – மானுடவியல்
    • ரூப் மாலிக் - வாழ்க்கை அறிவியல்
    • நளினி அனந்த ராமன் - கணித அறிவியல்
    • S.K. சதீஷ் - இயற்பியல் அறிவியல்
    • செந்தில் முல்லைநாதன் - சமூக அறிவியல்
  • இன்போசிஸ் பரிசானது இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள், சமூக ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளையால் வழங்கப்படும் வருடாந்திர விருதாகும்.
  • ஒவ்வொரு பிரிவிலும் விருது பெறுவோர் 22 காரட் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுப் பணம் ஆகியவற்றைப் பெறுவர்.
  • இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் மிக உயர்ந்த பணப் பரிசுகளில் இதுவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்