பொறியியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் 2019 ஆம் ஆண்டுக்கான இன்போசிஸ் விருது வென்றவர்களை இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை அறிவித்தது.
இன்போசிஸ் பரிசு
இது ஆண்டுதோறும் இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை வழங்கும் விருது ஆகும்.
இது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது (இவர்கள் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை).
முதன்முறையாக 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்த விருதானது ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த நிதிசார்ந்த விருதுகளில் ஒன்றாகும்.